Pozhudu - Surya
کاور آهنگ Pozhudu - Surya از Bombay Jayashri

Pozhudu - Surya

Atma:Soul۱۳۷۷۴:۵۱

متن موزیک

பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்

பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்

புன்மை யிருட்கணம் போயின யாவும்

பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்

புன்மை யிருட்கணம் போயின யாவும்

எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி

எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி

எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி

எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி

எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி

தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு

தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு

உன் தொண்டர் பல்லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்

தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு

உன் தொண்டர் பல்லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்

விழி துயில்கின்றனை இன்னும் எம் தாயே

விழி துயில்கின்றனை இன்னும் எம் தாயே

வியப்பிது காண் பள்ளி யெழுந்தருளாயே

வியப்பிது காண் பள்ளி யெழுந்தருளாயே

நின்னெழில் விழியருள் காண்பதற்கு

எங்கள் நெஞ்சகத்து ஆவலை நீ அறியாயோ?

நின்னெழில் விழியருள் காண்பதற்கு

எங்கள் நெஞ்சகத்து ஆவலை நீ அறியாயோ?

பொன்னனையாய் வெண் பனிமுடியிமயப்

பொன்னனையாய் வெண் பனிமுடியிமயப்

பொருப்பினன் ஈந்த பெருந்தவப் பொருளே

என்ன தவங்கள்

என்ன தவங்கள்செய்து எத்தனை காலம்

என்ன தவங்கள்செய்து எத்தனை காலம்

ஏங்குவம் நின்னருட்கு ஏழையம் யாமே

என்ன தவங்கள்செய்து எத்தனை காலம்

ஏங்குவம் நின்னருட்கு ஏழையம் யாமே

இன்னமும் துயிலுதியேல் இது நன்றோ

இன்னமும் துயிலுதியேல் இது நன்றோ

இன்னுயிரே-இன்னுயிரே பள்ளி யெழுந்தருளாயே

இன்னுயிரே பள்ளி யெழுந்தருளாயே, யெழுந்தருளாயே